செல்போன் பேசியதை சகோதரன் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை!

 
suicide

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே செல்போனில் பேசியதை, சகோதரன் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள பூலம் கிராமத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி. கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். துரைப்பாண்டி மனைவி மும்பையில் தங்கி இட்லி வியாபாரம் செய்யும் நிலையில், அவருக்கு துணையாக மகள் சுப்புலட்சுமி இருந்து வந்தார். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு துரைப்பாண்டிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது.

nellai gh

இதனால் தந்தையை கவனித்து கொள்வதற்காக சுப்புலெட்சுமி சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது, அவர் அடிக்கடி செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனை அவரது அண்ணன் கண்டித்து, செல்போனில் பேசுவதை கைவிடும்படி கூறி உள்ளார். இதனால் மனமுடைந்த சுப்புலட்சுமி, வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். தகவலின் பேரில்  மூன்றடைப்பு போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தந்தை துரைப்பாண்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.