தருமபுரி மாவட்டத்தில் மே 1-ல் டாஸ்மக் கடைகள் மூடல்!

 
dharmapuri

தொழிலாளர் தினத்தையெட்டி, தருமபுரி மாவட்டத்தில் வரும் மே 1ஆம் தேதி  அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், 01.05.2022 அன்று மே தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் இயங்கி வரும் மதுபானக் கடைகள் மற்றும் அத்துடன் இணைந்த மது அருந்தகங்கள் மற்றும் மதுபானம் விற்க உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்கள் அனைத்தும் 30.04.2022 இரவு 10 மணி முதல் 02.05.2022 காலை 12 மணி வரை மூடி வைக்க வேண்டும் என உத்தரவிடப்படுவதாக ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

tasmac

மேலும், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி எவரேனும் மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் திவ்யதர்ஷினி எச்சரித்துள்ளார்.