டிஎன்பிஎஸ்சி குரூப் -2 முதன்மை தேர்வு : சேலத்தில் நவ.22-ல் இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்!

 
collector

சேல மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் -2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 22ஆம் தேதி தொடங்கும் என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு வகையான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி குரூப் - 2 முதல் நிலை தேர்வில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயின்ற 104 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.

முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு டி.என்.பி.எஸ்.சி-ஆல் வரும் ஜனவரி 25 அன்று நடைபெற உள்ளது. இம்முதன்மை தேர்வுக்கான வழிகாட்டுதல் மற்றும் இலவச பயிற்சி வகுப்பு நவம்பர் 22ஆம் தேதி காலை 11 மணி அளவில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே போட்டித்தேர்வுகள் எழுதி வெற்றி வெற்ற சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளன. மேலும், பாடத்தொகுப்புகள், இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

tnpsc

முதல்நிலை தேர்வில் (preliminary) வெற்றி பெற்று முதன்மை தேர்வு (Mains) எழுதவுள்ள தேர்வுகள் பெயர், முகவரி, கல்வித்தகுதி மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களை வரும் 21ஆம் தேதி மாலை 5 மணிக்குள் empvgslm08@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியோ (அ) வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்தோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இப்பயிற்சி வகுப்புகள் தொடர்பான விவரங்களை 94990 55941 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

சேலம் மாவட்டத்தை சார்ந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்விற்கு தயாராகும் தகுவாய்ந்த நபர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.