கொடுமுடி அருகே கரும்பு வெட்டும் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு!

 
dead body

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி (33). இவர் விழுப்புரம் மாவட்டம் கோளியனூரை சேர்ந்த கரும்பு வெட்டும் கொத்துக்காரர் பரமசிவத்திடம் கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 4 மாதங்களாக ஈரோடு மாவட்டம் கிளாம்பாடி பழனிக்கவுண்டன் பாளையத்தில் உள்ள ராமலிங்கம் என்பவரது தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று கார்த்தி தோட்டத்தில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு வாந்தி ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.

erode gh

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள், கார்த்தியை மீட்டு ஆம்புலன்ஸ் முலம் ஈரோடு  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கார்த்தி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த மலையம்பாளையம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்எபவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.