வெளிநாட்டில் மருத்துவ படிப்பை தொடர விசா கிடைக்காததால் மாணவர் தற்கொலை!

 
suicide

கோவையில் வெளி நாட்டில் மருத்துவப் படிப்பை தொடர விசா கிடைக்காததால் விரக்தியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் தொப்பம்பட்டி கணபதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் அய்யணன். இவரது மகன் ஹரிஹரன்(21). இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்.டி மருத்துவம் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹரிஹரன் இந்தியாவிற்கு வந்திருந்தார்.  தற்போது மருத்துவப்படிப்பை தொடர்வதற்காக மீண்டும் பிலிப்பைன்ஸ் செல்ல விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக அவருக்கு விசா கிடைக்கவில்லை. இதனால் ஹரிஹரன் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

coimbatore gh

வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் ஹரிஹரன் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார், ஹரிஹரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை அய்யணன் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.