"சட்ட விரோதமாக இளைஞர்களை வெளிநாட்டிற்கு அனுப்பும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை" - தேனி ஆட்சியர் எச்சரிக்கை!

 
theni collector

சட்ட விரோதமான முறையில் இளைஞர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் ஒன்றிய அரசின் பதிவு பெற்ற முகவர்களை அணுகி வேலைக்கான விசா, என்ன பணி, முறையான பணி ஒப்பந்தம் ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.  போலி முகவர்கள் ஆன்லைன் மூலமாக சட்டவிரோதமான செயல்களை ஐடி துறையில் திறமை மிக்கவர்கள் குறிவைத்து ஏமாற்றுவதாக தெரிவித்துள்ள அவர், சமூக வலைதளங்களில் வரும் போலியான விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். 

jobs

மேலும், டூரிஸ்ட் விசா/ பார்வையாளர் விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ள ஆட்சியர் முரளிதரன், பணிகள் குறித்த விவரங்கள் தெரியாவிடில், தமிழக அரசை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள இந்திய துதரகத்தை தொடர்பு கொண்டு பணி செய்யப்போகும் நிறுவனத்தின் உண்மை தன்மையினை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு கீழ் கண்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார். 91- 9600023645, 91-8760248625, 044 - 28515288. மேலும், இதுபோன்ற சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் முரளிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.