கோவையில் ஜாக் கமிட்டி சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை... ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

 
ramzan

கோவை குனியமுத்துரில் இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரான ஜாக் கமிட்டியின் சார்பில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

கோவை குனியமுத்துர் பகுதியில் உள்ள ஆயிஷா திடலில் ஜாக் கமிட்டி எனப்படும் ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் சார்பில் இன்று காலை ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

ramzan

கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக சிறப்பு தொழுகை நடத்த அனுமதி வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதனிடையே, இஸ்லாமிய பெரும்பான்மை பிரிவான, சுன்னத் ஜமாத் சார்பில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.