தென்காசியில் வரும் 21-ல் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

 
tenkasi

தென்காசி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 21ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்தோர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21-09-2022 அன்று பிற்பகல் 3 மணிக்கு  மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

tenkasi ttn

எனவே தென்காசி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்கள் / அவரை சார்ந்தோர்கள் தங்களுக்கு குறைகள் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நடத்தப்படும், இச்சிறப்பு படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது அசல் படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு தங்களது குறைகளை இரட்டை பிரதியில் விண்ணப்பம் மூலம் தெரிவித்து பயனடையுமாறு , ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.