தருமபுரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வையொட்டி இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 
TNPSC

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத்தேர்வு இன்று நடைபெறுவதை ஒட்டி தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.  

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் Group l-ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான முதன்மை தேரவு இன்று சனிக்கிழமை முற்பகல் மட்டும் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 35 தேர்வு மையங்களில் சுமார் 10,838 தேர்வர்கள் தேர்வு எழுதவிருக்கின்றனர். இத்தேர்வு மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

dharmapuri

தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும் எனவும், 9 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்கு வந்தால் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக படித்து, அவற்றை முழுமையாக கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுவதாக ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.