திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

 
disable people

திண்டுக்கல்லில் ஆட்சியர் விசாகன் தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 127 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், மாற்றத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் விசாகன் தலைமையில் இன்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் வழங்கினர். இன்றைய கூட்டத்தில் மாதாந்திர ஓய்வூதியம், தொழில் கடன், 3 சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 127 மனுக்கள் வரப்பெற்றன. 

dindigul

மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் விசாகன், அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், தனித்துணை ஆட்சியர் ( சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜசேகர், முன்னோடி வங்கி மண்டல மேலாளர் அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.