நமக்கு நாமே திட்டத்துக்கு சக்தி மசாலா நிறுவனம் ரூ.2 லட்சம் வழங்கல்!

 
erode

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 11-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் பணிகளுக்காக நாமக்கு நாமே திட்டத்துக்கு, சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சி பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன், நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், அரசுப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர் கட்டுதல், கழிவுநீர் கால்வாய் வசதி, மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் புதிய கட்டிடங்கள் கட்டுதல் ஆகிய பணிகள் இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது பங்களிப்புடன் செயல்படுத்துவதுமே திட்டத்தின் பிரதான நோக்கமாகும். 

erode corporation

இந்த நிலையில், ஈரோடு மாநகராட்சி உட்பட்ட 11-வது வார்டு வெட்டுக்காட்டு வலசு, காமதேனு நகர் பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில், தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்க ரூ.2 லட்சத்துக்கான வங்கி வரைவோலை நேற்று வழங்கப்பட்டது. சக்தி மசாலா நிறுவனங்களின் சேர்மன் டாக்டர் பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குனர் டாக்டர் சாந்தி துரைசாமி ஆகியோர், அந்த பகுதியை சேர்ந்த ஆசிரியர் ராஜமாணிக்கத்திடம் வரைவோலையை வழங்கினர். சக்தி மசாலா நிறுவனத்தின் இந்த பணியினை அந்த பகுதி மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்துக்கொண்டனர்.