பெருந்துறையில் சக்தி மசாலா சுழற்கோப்பை விளையாட்டு போட்டிகள்.. வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல்!

 
sakthi

பெருந்துறையில் சக்தி மசாலா நிறுவனம் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு பொருட்கள் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.  

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சக்தி மசாலா நிறுவன சக்தி தேவி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றன. ஈரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டியை பெருந்துறை வட்டாரக் கல்வி அலுவலர் தனபாக்கியம், முத்துமேகலை ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று, விளையாட்டு போட்டிகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

perundurai

பின்னர் சக்தி துரைசாமி கலையரங்கில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, சக்தி மசாலா நிறுவனங்களின் நிறுவனர் பி.சி. துரைசாமி தலைமை தலைமை வகித்து உரையாற்றினார். இயக்குநர் சாந்தி துரைசாமி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தொடக்கக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரிகா பங்கேற்று, வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருட்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்த போட்டியில் அதிக வெற்றி புள்ளிகளை பெற்ற மாணிக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, சக்தி மசாலா சுழற்கோப்பை 2022.யினை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், சக்தி மசாலா நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ஆகியோர் இணைந்து வழங்கினர். இவ்விழாவில் வழிகாட்டி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம், ஆலோசகர் ராஜமாணிக்கம், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.