ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

 
pocso

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் சாமிகண்ணு மகன் ராஜேஷ். கூலி தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த செவிலியர் கல்லூரியில் படிக்கும் 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அப்போது, சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

jayankondam

அதன் பேரில், மகளிர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமிக்கு, ராஜேஷ் பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதனை தொடர்ந்து, போலீசார் ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.