கணவரை பிரிந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தொழிலாளி கைது!

 
rape

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த அச்சு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ராதாகிருஷ்ணன் காலனியை சேர்ந்தவர் குமரேசன். தொழிலாளி. இவரது மனைவி உமா (42). குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்த உமா, சிவகாசியில் உள்ள தனியார் காகித அட்டை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், உமாவுக்கு, ராதாகிருஷ்ணன் காலனியை சேர்ந்த அச்சு தொழிலாளி ஆறுமுகவேல் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

arrest

இதுகுறித்து பலமுறை கண்டித்தும் ஆறுமுகவேல் தொல்லை அளித்ததால், அவர் மீது உமா சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஆறுமுகவேல் பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதனை அடுத்து, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகவேலை கைது செய்தனர்.