திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது!

 
pocso

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பிரகாசபுரம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அதே பகுதியில் கரும்புசாறு கடை நடத்திவரும் தர்மராஜ்(55) என்பவர் மாணவியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று மாணவி வீட்டில் தனியாக இருந்த நிலையில், அங்கு வந்த தர்மராஜ் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அதனை தொடர்ந்து, அவர் மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.

arrest

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து சிறுமி திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் தர்மராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்