தக்கலை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - தந்தை கைது!

 
rape

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(17). இவரது 17 வயது மகள் பிளஸ் 2 முடித்துவிட்டு மேற்படிப்பிற்கு தயாராகி வருகிறார். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த ரமேஷ் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில், ரமேஷ் இரவு நேரங்களில் மதுபோதையில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தார்.

arrested

அதன் பேரில் அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டபோது, வெளிநாட்டில் பணிபுரியும் ரமேஷ் ஊருக்கு வரும்போதெல்லாம் தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், மகளிர் போலீசார் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.