செய்யாறு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை... டிராக்டர் ஓட்டுநர் போக்சோவில் கைது!

 
pocso

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் தொல்லை அளித்த டிராக்டர் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், மாணவி, அதே கிராமத்தை சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் சந்தோஷ் (22) என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், சந்தோஷ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமடைந்துள்ளார். இதுகுறித்து மாணவி சந்தோஷிடம் கூறி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.

arrest

அப்போது, சந்தோஷ் மாணவியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.