சேலம் அருகே 9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - சிறுவன் கைது!

 
pocso

சேலம் மாவட்டம் வீரகனூரில் 9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 17 வயது சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் வீரகனூரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவரது 17 வயது மகள், கூகையூரில் உள்ள அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், சிறுமி அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழகி வந்துள்ளார். அந்த சிறுவன் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர், அவரை கூகையூரில் உள்ள தங்களது உறவினர் வீட்டில் தங்கவைத்து, பள்ளிக்கு அனுப்பி வந்துள்ளனர். 

arrest

இதனை அறிந்த சிறுவன், பள்ளிக்கு சென்று சிறுமிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், இதனை கண்டித்த சிறுமியின் உறவினர்களையும் அவர் அவதூறாக பேசியுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர், அந்த சிறுவன் மீது ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை சேலம் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.