விருதுநகரில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி... 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

 
vnr

விருதுநகரில் நேற்று நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். 

விருதுநகர் ஆர்.ஆர்.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று புதுவசந்தம் மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு, ராம்கோ சேவைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு உள்ளிட்டோர் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தினர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி கலந்துகொண்டு சுயம்வரம் விழாவை குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

vnr

இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்க்கை துணை குறித்த எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வரும் நவம்பர் மாதம் திருமணம் செய்து வைக்கப்பட உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், ராம்கோ சிமெண்ட் நிர்வாக தலைவர் ராமலிங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு சங்க தலைவர் சிம்மநாதன்,  மாவட்ட மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.