மதுரை அருகே மினிவேனில் கடத்திய 1,800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது!

 
ration rice

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மினிவேனில் கடத்திய 1800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் பேரையூரில் இருந்து திருமங்கலம் செல்லும் சாலையில் நேற்று குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி வேனை சந்தேகத்தின் பேரில், நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது வேனில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது.

arrest

இதனை அடுத்து, சுமார் 45 மூட்டைகளில் இருந்த 1,800 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மினிவேனில் இருந்த மேலஅனுப்பானடியை சேர்ந்த பிரபல அரிசி கடத்தல் மன்னன் கொரில்லா முத்து என்கிற முத்து, வேன் ஓட்டுநர் வலையங்குளத்தை சேர்ந்த அருணாச்சலம் ஆகியோரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.