சூலூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர் பலி!

 
drowned

கோவை மாவட்டம் சூலூர் அருகே கல்குவாரி குட்டையில் முழ்கி தனியார் பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஹரிஹரன்(15). இவர் தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று ஹரிஹரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சூலூர் அருகே பட்டணம் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்றார். அப்போது, குட்டையில் இறங்கி குளித்தபோது எதிர்பாராத விதமாக ஹரிஹரன் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கூச்சலிடவே, அந்த பகுதி இளைஞர்கள் குட்டையில் இறங்கி தேடினர். 

coimbatore gh

மேலும், தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு நேரமாகியதால் தேடுதல் பணி தற்காலிக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று காலை மீண்டும் தேடியபோது சிறுவன் ஹரிஹரன் உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து, சூலூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.