குடியாத்தம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை... சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது!

 
pocso

குடியாத்தம் அருகே வீட்டில் தனியாக இருந்த 7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பெற்றோர் வெளியே சென்றிருந்ததால் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், மாணவியின் வீட்டிற்குள் புகுந்து அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிடவே, அந்த சிறுவன் இதுகுறித்து யாரிடம் சொல்லக்கூடாது என மிரட்டிவிட்டு தப்பிச்சென்றார்.

gudiyatham

பெற்றோர் வீட்டிற்கு வந்த பின்னர் சிறுமி தனக்கு நிகழ்ந்த கொடுமையை கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், குடியாத்தம் அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.