பெருந்துறை அரசுப்பள்ளி மாணவிகளுக்கு அதிமுக சார்பில் கல்வி உதவித்தொகை... எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார் வழங்கினார்!

 
peru

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பிடித்த 12 மாணவிகளுக்கு, அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார், கல்வி உதவித்தொகை மற்றும் கேடயத்தை வழங்கினார்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட 15 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுதோறும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த சிறந்த 12 மாணவ - மாணவிகளுக்கு, அதிமுக சார்பில் தலா ரூ.2,000 கல்வி உதவித் தொகையும், கேடயமும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார் வழங்கி வருகிறார். அதன்படி, கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்த  சிறந்த மாணவிகள் 12 பேருக்கு உதவித் தொகை வழங்கும் விழா இன்று பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பெருந்துறை எம்எல்ஏவும், அம்மா பேரவை இணை செயலாளருமான எஸ். ஜெயக்குமார் கலந்துகொண்டு 12 மாணவிகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் கேடயத்தை வழங்கினார். 

peru

இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ் முன்னிலை வகுத்தார். முன்னாள் அமைச்சர் தலைவர் டி.டி.ஜெகதீஷ், பேரூராட்சி செயலாளர்கள் கேஎம் பழனிச்சாமி, கல்யாணசுந்தரம், கோபாலகிருஷ்ணன், எம்ஜிஆர் மன்றம் அப்புகுட்டி என்கிற வெங்கடாசலபதி, முன்னாள் பேரூராட்சி தலைவர் பல்லவி பரமசிவம், பொருளாளர் கேபிஎஸ் மணி, விவசாய பிரிவு சாமிநாதன், பேரூராட்சி வார்டு உறுப்பினர் குணசேகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கோபாலகிருஷ்ணன், வர்த்தக அணி ராஜேந்திரன், இளைஞர் பாசறை பிரபாகரன், ரகுநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்