சாத்தூர் வெங்கடாஜலபதி கோவில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா தேரோட்டம்!

 
sattur

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிரசித்திபெற்ற வெங்கடாஜலபதி கோவில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோவில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிலையில், ஆனி பிரம்மோற்சவ திருவிழாவின் 9ஆம் நாளான நேற்று தோராட்டம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி, நேற்று காலை பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். 

sattur

தொடர்ந்து வருவாய்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், எம்எல்ஏ ரகுராமன் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்து பெருமாளை வழிபட்டனர். நிலையில் இருந்து புறப்பட்ட தேரானது தேரடி தெரு, பள்ளிவாசல் தெரு, வடக்கு ரத வீதி வழியாக வலம் வந்து பின்னர் நிலையை அடைந்தது.