சேலம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 435 மனுக்கள் பெறப்பட்டன!

 
slm

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 435 மனுக்கள் பெறப்பட்டன. 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் கார்மேகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் தங்களுடைய மனுக்களை வழங்கினர். இதன்படி, இன்றைய முகாமில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி, வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 435 மனுக்கள் வரப்பெற்றன. மேலும், மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 18 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

slm

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் கார்மேகம், பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வாசிப்பு கருவிகளையும் அவர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தனித்துணை ஆட்சியர்( சமூக பாதுகாப்பு திட்டம்) சத்திய பால கங்காதரன், துணை ஆட்சியர் (முத்திரைத்தாள் கட்டணம்) துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.