நத்தம் அருகே பெட்டிக்கடையில் பதுக்கிய ரூ.92 ஆயிரம் குட்கா பறிமுதல் - கடை உரிமையாளர் கைது!

 
gutka

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ.92 ஆயிரம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக கடை உரிமையாளரை கைது செய்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள வேலாயுதம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா  பொருட்கள் விற்பனை செய்வதாக, நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார், வேலாயுதம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேலாயுதம்பட்டியில் உள்ள பெட்டிக்கடையில் சோதனையிட்டபோது, அங்கு விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

arrest

குட்காவை பதுக்கியது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பெட்டிக்கடை உரிமையாளர் அடைக்கன் மகன் சுரேஷ் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.92 ஆயிரம் மதிப்புள்ள 88 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுரேஷின் சகோதரர் காமராஜரை தேடி வருகின்றனர்.