வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக இளைஞரிடம் ரூ.2.25 லட்சம் மோசடி... சென்னை இளைஞர் கைது!

 
ffff

செந்துறையை சேர்ந்த இளைஞரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.25 லட்சம் மோசடி செய்த சென்னை இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் ரூ.2 லட்சம் பணம், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். 

அரியலூர் மாவட்டம் செந்துறை காந்தி நகரை சேர்ந்தவர் முருகன்(29). கடந்த 3 மாதங்களுக்கு முன் இவரது செல்போனிற்கு வெளிநாட்டு எண்ணில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், அவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி  தருவதாக கூறிள்ளார். இதனை நம்பிய முருகன், அந்த நபரின் வங்கிக்கணக்கிற்கு ரூ.2.25 லட்சம் பணம் செலுத்தி உள்ளார். ஆனால் அந்த நபர் கூறியபடி வெளிநாட்டில் வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து அந்த நபரிடம் விசாரித்தபோது அவர் முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முருகன், இது குறித்து அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

arrest

அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் மோசடியில் ஈடுபட்ட நபர் சென்னை முடிச்சூர் மதனபுரத்தை சேர்ந்த மகேஷ்(39) என்பது தெரியவந்தது.  இதனை அடுத்து, மகேஷை கைது செய்த சைபர் கிரைம் போலீசார், அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் பணம் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மகேஷை அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.