பெருந்துறையில் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்... எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் பங்கேற்பு!

 
art fest

பெருந்துறையில் நடந்த வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டியில், 20-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ - மாணவிகளிடம் புதைந்து கிடக்கும் கலைத்திறனை, படைப்பாற்றலை வெளிக்காட்டும் விதமாகக ’கலைத் திருவிழா’நடைபெற்று வருகிறது. இதன்படி, ஈரோடு மாவட்டம்  பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 3 நாட்களாக கலைத்திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் பெருந்துறை வட்டாரத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்தினர்.

art fest

இந்த நிகழ்ச்சியில், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளையும், பள்ளி ஆசிரியர்களையும் கேடயங்கள் வழங்கி உற்சாகப்படுத்தினார். வட்டார அளவில் முதல் 2 இடம் பெறுவர்கள், மாவட்ட போட்டிகளுக்கும், மாவட்ட அளவில் ஒவ்வொரு பிரிவுகளும் முதலிடம் பெறும் தனிநபர் மற்றும் குழுக்கள், மாநில போட்டியிலும் கலந்து கொள்ள முடியும். அரசு பள்ளிகளில் நடைபெறும் இந்த கலைத் திருவிழாவின் இறுதிப்போட்டி இம்மாதம் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பெருந்துறை பேரூராட்சி அதிமுக செயலாளரும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான கல்யாணசுந்தரம், கல்வி அறக்கட்டளை குழு தலைவர் பல்லவி பரமசிவம், அதிமுக மாவட்ட பொருளாளர் கேபிஎஸ் மணி உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.