திண்டுக்கல்லில் இளைஞரிடம் இணையவழியில் மோசடி செய்த ரூ.1 லட்சம் பணம் மீட்பு!

 
dgl

திண்டுக்கல் அருகே இணைய வழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சம் பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் பாண்டி (31). கடந்த சில நாட்களுக்கு முன் இவரது செல்போனிற்கு, எஸ்.பி.ஐ  வங்கியிலிருந்து அனுப்புவது போல் மர்ம நபர்  கே.ஒய்.சி அப்டேட் செய்யும்படி லிங்க் ஒன்றை அனுப்பி உள்ளார். வங்கியில் இருந்து அனுப்பியதாக எண்ணிய விக்னேஷ் பாண்டி, அந்த லிங்க்கை கிளிக் செய்து தகவல்களை பதிவிட்டு உள்ளார். அப்போது, திடீரென அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணம்  எடுக்கப்பட்டதாக அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ் பாண்டி, இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

dindigul

புகாரின் மீது,  திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் உத்தரவிட்டதன் பேரில், சைபர் கிரைம் போலீசார் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு, மர்ம நபரின் வங்கி கணக்கை முடக்கம் செய்து ரூ.1 லட்சம் பணத்தை மீட்டனர். இதை தொடர்ந்து, நேற்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், விக்னேஷ்பாண்டியிடம் மீட்கப்பட்ட ரூ.1 லட்சம் பணத்தை  ஒப்படைத்தனர்.