முதியவரிடம் இணைய வழியில் மோசடி செய்த ரூ.1.81 லட்சம் மீட்பு!

 
cbe

கோவை துடியலுரில் முதியவரிடம் இணைய வழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.1.81 லட்சம் பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

கோவை மாவட்டம் துடியலுர் இடிகரை பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது செல்போனுக்கு கடந்த மாதம் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் அவரது வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாவும், அதனை புதுப்பிக்க வங்கி கணக்கு விபரங்களை அளிக்கும்படி கூறிப்பட்டுள்ளது. இதனை உண்மை என நம்பிய குமரவேல், அந்த குறுஞ்செய்தியில் உள்ள லிங்கை கிளிக் செய்து, வங்கிக்கணக்கு விபரங்களை பதிவிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, சிறிது நேரத்தில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.2,02,715 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

police

இதானல் அதிர்ச்சியடைந்த குமரவேல், இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் துரிதமாக செயல்பட்டு, ரூ.1.81 லட்சம் பணத்தை மீட்டனர். தொடர்ந்து, கடந்த 29ஆம் தேதி அவரது வங்கிக்கணக்கிற்கு திரும்ப பெற்றுக் கொடுத்தனர்.  துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டதற்கான ஆவண சான்றிதழை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் நேற்று பாதிக்கப்பட்டவரிடம் வழங்கினார்.