ராமநாதபுரத்தில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் பணம் திருட்டு... சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 
rmd

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் காரின் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் பணத்தை திருடிச் சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் தெற்கு முனியசாமி கோவில் தெருவில் வசித்து வருபவர் பழனியப்பன்(50). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பழனியப்பன், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே தனது காரை நிறுத்திவிட்டு அருகில் உள்ளே உணவகத்திற்கு சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் வந்து பார்த்தபோது காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த ரூ.3 லட்சம் ரொக்கப் பணம் திருட்டு போனது தெரிய வந்தது.

rmd

இதனால் அதிர்ச்சியடைந்த பழனியப்பன், கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர்கள் இருவர் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பணத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து, சிசிடிவி காட்சி அடிப்படையில் பணத்தி திருடிச் சென்ற 2 நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.