புதுக்கோட்டை மேட்டுப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு!

 
manjuvirattu

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை ஊராட்சி மேட்டுப்பட்டியில் நடைபெற்ற வடமாடு மஞ்சு விரட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

manjuvirattu

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை ஊராட்சி மேட்டுப்பட்டியில் நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். இதில், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 12 காளைகளும், 150 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். மாடுபிடி வீரர் குழுக்களாக பிரிக்கப்பட்டு காளைகளை தழுவினர்.

manjuvirattu

ஓவ்வொரு காளைக்கும் தலா 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவீரர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு அமைச்சர் ரகுபதி பரிசுகளை வழங்கினார். இந்த போட்டியில் காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.