பொதுமக்கள் புகார் எதிரொலி... ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் எம்எல்ஏ திருமகன் ஈவெரா ஆய்வு!

 
thirumagan

ஈரோடு மாநகராட்சி கல்லுக்கடைமேடு சாம்பசிவம் தெருவில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடம் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கேட்டறிந்தார்

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லுக்கடைமேடு ஜீவானந்தம் ரோடு சாம்பசிவம் தெருவில் சாலைகள் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும், குடிநீர் குழாய்கள் சரிவர பதிக்கப்படாமல் சாலை மீது இடைஞ்சலாக செல்கிறது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் நடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், வாகனங்கள் செல்லவும் இடையூறாக உள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள், 
தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெராவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.

mla

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு திரும்பிய எம்எல்ஏ திருமகன் ஈவெரா, சாம்பசிவம் தெருவில் நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, அந்த பகுதி பிரச்சினைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு, அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.