காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.4.33 லட்சம் உதவி உபகரணங்கள் வழங்கல்!

 
kanchi

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாற்றுத்திறன் கொண்ட 23 குழந்தைகளுக்கு ரூ.4.33 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை ஆட்சியர் ஆர்த்தி நேற்று வழங்கினார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை மூலம் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் மாவட்டத்தில் 140 பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இதன் முதற்கட்டமாக காஞ்சிபுரம் ஒன்றியத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்றது.

kanchi

இதில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கலந்து கொண்டு முதற்கட்டமாக 23 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.4.33 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, காது கேட்கும் கருவி, Rolater, CP நாற்காலி, MSIED Kit, Sum of Elbow crutchers, Fabrication Devices போன்ற ALMCO உதவி உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.