குன்னத்தூர் அரசுப்பள்ளிக்கு ரூ.26 லட்சம் மதிப்பில் ஆரோ வாட்டர் பிளாண்ட், பெஞ்ச் - டெஸ்க்குகள் வழங்கல்!

 
peru

ஈரோடு மாவட்டம் குன்னத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.26 லட்சம் மதிப்பிலான ஆரோ பிளாண்ட் மற்றும் சேர், டெஸ்க்குகளை பெருந்துறை எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் வழங்கினார். 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட குன்னத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும், அமரும் இருக்கைகள், டெஸ்க்குகள் உள்ளிட்டவற்றை வழங்கவும், பள்ளி நிர்வாகம் சார்பில் எமஎல்ஏ எஸ்.ஜெயக்குமாரிடம் கோரிக்கை விடுக்ப்பட்டது. அதனை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் மாணவிகள் குடிப்பதற்காக ஆரோ வாட்டர் பிளாண்ட் மற்றும் ரூ.16 லட்சம் மதிப்பில் மாணவிகள் அமரும் வகையில் பென்ச், டெஸ்க், சேர்கள் ஆகியவை வழங்கப்பட்டன. 

perundurai

இதனையொட்டி, இன்று குன்னத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பெருந்துறை எம்எல்ஏ-வும், அம்மா பேரவை இணை செயலாளருமான எஸ்.ஜெயக்குமார் கலந்து கொண்டு ஆரோ வாட்டர் பிளாண்ட் செயல்பாட்டை துவங்கி வைத்து, சேர், டெஸ்குகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேஎஸ் பழனிசாமி தலைமை வகித்தார். குன்னத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் ரவி முன்னிலை வகித்தார். 

இந்த நிகழ்ச்சியில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கண்ணம்மாள் ராமசாமி,  பொருளாளர் கேபிஎஸ் மணி, ஒன்றிய செயலாளர் பி தனசேகர், பேரூர் செயலாளர்கள் கேஎஸ் சரண் பிரபு, கேஎஸ் சக்திவேல், எம்கே அய்யாசாமி,  துணைச் செயலாளர்கள் அருண்குமார்,  கார்த்திகேயன், கவுன்சிலர்கள் சுப்ரமணி, புஷ்பா சுப்பிரமணி, சரஸ்வதி கார்த்திகேயன், ஊத்துக்குளி ஒன்றிய குழு உறுப்பினர்கள் மோகனசுந்தரி மாணிக்கம்,  சம்பத்குமார், மரகதமணி செல்வராஜ், மாணவரணி அம்மன் கே.சேகர், நவக்காடு ஊராட்சி மன்ற தலைவர் குட்டி, வர்த்தக அணி ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.