குன்னத்தூர் அருகே 3 கிராம மக்களுக்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்... டிரம்ஸ் வாசித்து இளைஞர்களை உற்சாகப்படுத்திய அதிமுக எம்எல்ஏ!

 
peru

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு 3 கிராம மக்களுக்கு வேஷ்டி துண்டு, சீருடைகள், டிரம்ஸ் உள்ளிட்டவற்றை பெருந்துறை எம்எல்ஏ எஸ் ஜெயக்குமார் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளவர் மரகதமணி செல்வராஜ். இவரும், இவரது கணவரும் ஒன்றிய அம்மா பேரவை செயலாளருமான செல்வராஜ் ஆகியோரும் தங்களது வார்டுக்குட்பட்ட 3 கிராம மக்களுக்கு பொங்கல் விழாவை முன்னிட்டு சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பெருந்துறை தொகுதி எம்எல்ஏவும், அம்மா பேரவை இணை செயலாளருமான ஜெயக்குமார் கலந்துகொண்டு கம்மாளகுட்டை அர்ஜுன காலனி, குறிச்சிபுதூர் காலனி மற்றும் நல்லிக்கவுண்டம் பாளையம் காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு  வேஷ்டி - துண்டு மற்றும் இறைஞர்களுக்கு  டிரம்ஸ், மத்தளங்கள், அவர்களுக்கான சீருடைகள் ஆகியவற்றை வழங்கினார்.

பெருந்து

அத்துடன், அப்போது இளைஞர்களுக்கு கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டம்ப் ஆகியவையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கிராம  இளைஞர்களோடு இணைந்து எம்எல்ஏ ஜெயக்குமார் மத்தளம் அடித்து, டிரம்ஸ் வாசித்ததோடு,  ஊர் மக்களுடன் சிறிது நேரம் சலங்கை ஆட்டம் ஆடினார். இதனால் கிராம மக்களும், இளைஞர்களும் உற்சாகமடைந்தனர். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் சிடி ரவிச்சந்திரன், தனசேகரன், மாவட்ட கவுன்சிலர் கண்ணம்மாள் ராமசாமி, பொருளாளர் கேபிஎஸ் மணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ரங்கசாமி, பூர்ணிமா ரங்கசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும், கிராம மக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.