ஈரோட்டில் தமமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

 
tmmk

ஈரோட்டில் ரமலான் மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ரமலான் மாதத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில், ஈரோட்டில் ரமலான் மாதத்தை முன்னிட்டும், சமூக நல்லிணக்கத்தை போற்றும் விதமாகவும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கருங்கல்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கமலா நகர் கிளை செயலாளர் மீரான் தலைமை தாங்கினார். கக்கன் நகர் கிளை தலைவர் கே.ஏ. மெஹபூப் வரவேற்றார். 

tmmk

திருநகர் காலனி கிளை தலைவர் கேஎஸ் சாகுல் ஹமீது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் எ.சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் நிர்வாகிகள் 900  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மருத்துவர் அணி மாநில துணைச் செயலாளர் எ.எம் பெஜுல்ஹசன்,  தமுமுக மாவட்ட செயலாளர் முகமது லரீப், மனிதநேய மக்கள் க ட்சி மாவட்ட செயலாளர் சலிம், மாவட்டத் துணைச் செயலாளர் சகுபர் அலி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இலியாஸ், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆட்டோ சாகுல் உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் கலைஞர் நகர் கிளை தலைவர் ஷாஜகான் நன்றி கூறினார்.