மசாஜ் சென்டரில் வெளிமாநில அழகிகளை வைத்து விபச்சாரம் - கேரளாவை சேர்ந்த இருவர் கைது!

 
arrest

ஈரோட்டில் மசாஜ் சென்டரில் வெளி மாநில அழகிகளை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 2 தரகர்களை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளியை சேர்ந்தவர் 29 வயது இளைஞர். இவர் வேலை தொடர்பாக ஈரோட்டிற்கு சென்றுள்ளார். அரசு மருத்துவமனை பகுதியில் நின்றபோது அவரிடம் வந்த இளைஞர் தான் ஜிபு என்றும், பால தண்டாயுதம் வீதியில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளர். மேலும், ரூ.2 ஆயிரம் கொடுத்தால் அங்குள்ள பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட இளைஞர், ஜிபுவின் மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளார். அங்கிருந்த சிஜோ (25) என்பவர் 3 பெண்களை அறிமுகம் செய்து பிடித்தவருடன் செல்லும்படி அறிவுறுத்தி உள்ளார்.

generic erode

 இதனை தொடர்ந்து, இளைஞர், அந்த பெண்களிடம் விசாரித்தபோது அவர்கள் சேலம், அரியானா மற்றும் டெல்லியை சேர்ந்தவர்கள் என்பதும், மசாஜ் செய்யும் வேலை என கூறி அழைத்துவந்து தங்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களை இங்கிருந்து காப்பாற்றும்படியும் கேட்டுக் கொண்டு உள்ளனர்.  பின்னர் பணம் எடுக்க ஏடிஎம் செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்ற இளைஞர், இதுகுறித்து ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் அடிப்படையில், போலீசார் மசாஜ் சென்டருக்கு சென்று சோதனையிட்டபோது விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களையும், அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கேரளாவை சேர்ந்த ஜிபு, சிஜோ ஆகியோரை  கைது செய்தனர். பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் கடந்த 1.5 வருடமாக இந்த பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து,  தாலுகா போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஜிபு, சிஜோவை கைது செய்து, கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும், விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களையும் மீட்டு கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.