ஸ்ரீபெரும்புதூரில் வரும் 28ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

 
vinayagar chaturthi - Kanchipuram Collector Aarthi

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் வரும் 28ஆம் தேதி வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டு மையம்,  நிர்வாகத்தின் சார்பாக,  தீன் தயாள்  உபத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY) திட்டத்தின் கீழ், தனியார்  துறை வட்டார  அளவிலான  வேலைவாய்ப்பு  முகாம் (Job Fair) 28.01.2023 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஸ்ரீபெரும்புதூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

jobs

இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்யப்படவுள்ளனர். எனவே இம்முகாமில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண் மற்றும் பெண் இருபாலரும் கலந்துகொண்டு பயன் பெற தெரிவிக்கப்படுகிறது. மேலும், DDU-GKY மற்றும் ESTP திட்டத்தின் கீழ் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி முடித்து வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.