தனியார் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை... கிருஷ்ணகிரி அருகே சோகம்!

 
fire

கிருஷ்ணகிரி அருகே தனியார் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கே. பூசாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் தச்சு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகள் பவித்ரா (20). இவர் சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பவித்ரா மன உளைச்சலுடன் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர், அவரை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் பவித்ரா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது அவர் திடீரென தின்னரை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார்.

krishnagiri

இதில் உடல் முழுவதும் தீ பற்றியதில் பலத்த தீக்காயம் அடைந்த பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த மகாராஜாகடை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தந்தை முருகேசன் அளித்த புகாரின் பேரில் மகாராஜாகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.