"பிரதமர் வருகை - வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் 2 நாட்கள் மாற்றுபாதையில் இயக்கம்" - மதுரை எஸ்பி தகவல்!

 
madurai sp

பிரதமர் திண்டுக்கல் வருகையை ஒட்டி, இன்றும், நாளையும் பிற மாவட்டங்களில் இருந்து மதுரை, திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக, மதுரை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதுரை மாவட்ட எஸ்பி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- நாளை பிரதமர் மோடி திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலை.யில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவுள்ளார். இதில் தமிழக ஆளுநர், முதல்வர் ஆகியார் உடன் கலந்துகொள்ள உள்ளனர். மேற்படி விழாவிற்கு நாளை பிரதமர் மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு சால மார்க்கமாக செல்லயிருப்பதால், இதன் பொருட்டு வரும் இன்று பாதுகாப்பு முன்னோட்டம் நிகழ்வு நடைபெற இருக்கின்றது.

எனவே இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் பிற மாவட்டங்களில் இருந்து மதுரை, திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கீழ்கண்ட மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

modi

1.மதுரை மாநகரில் இருந்து திண்டுக்கல் செல்வதற்கு மதுரையில் இருந்து அலங்காநல்லுர், பாலமேடு, இராஜாக்கால்பாட்டி, முனையூர், நரசிங்கபுரம் வழியாக திண்டுக்கல் செல்ல வேண்டும். அல்லது மதுரையில் இருந்து பாத்திமா கல்லுரி வழியாக அலங்காநல்லுர் கேட்டுக்கடை, எம்.சத்திரப்பட்டி, நத்தம் வழியாக தேனி செல்ல வேண்டும்.

2 மதுரை மாநகரில் இருந்து தேனி செல்வதற்கு பாத்திமா கல்லுரி வழியாக பரவை, சமயநல்லுர் (நான்கு வழிச்சாலை பாலத்தின் கீழ்), தேனுர் ரோடு மேலக்கால், செக்கனுராணி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி வழியாக தேனி செல்ல வேண்டும்.

3.ராஜபாளையத்தில் இருந்து திண்டுக்கல் செல்வதற்கு தே.கல்லுப்பட்டி சந்திப்பில் இருந்து பேரையூர், சேடப்பட்டி, உசிலம்பட்டி, வத்தலகுண்டு, செம்பட்டி வழியாக திண்டுக்கல் செல்ல வேண்டும்.

4.ராஜபாளையத்தில் இருந்து மதுரை மாநகருக்கு செல்வதற்கு கள்ளிக்குடி சந்திப்பில் இருந்து காரியபட்டி, ஆவியூர், பாரப்பத்தி,  எலியார்பத்தி டோல்கேட், வலையங்குளம் சந்திப்பு, சோழன்குருனி சந்திப்பு, விராதனுர், சிந்தாமணி டோல்கேட் வழியாக மதுரை மாநகருக்கு செல்ல வேண்டும்.

madurai

5. திருச்சியில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு செல்ல ராமநாதபுரம் ரிங்ரோடு சந்திப்பில் இருந்து திருப்புவனம், அல்லிநகரம் சந்திப்பு, புல்வாய்கரை சந்திப்பு, தொட்டியங்குளம் சந்திப்பு, திம்மாபுரம், முஸ்டக்குறிச்சி, மீனாட்சிபுரம், காரியப்பட்டி வழியாக நெல்லை செல்ல வேண்டும்.

6. நெல்லையில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் கள்ளிக்குடி சந்திப்பில் இருந்து காரியப்பட்டி, எலியார்பத்தி டோல்கேட், வளையங்குளம் சந்திப்பு, சிந்தாமணி மற்றும் மதுரை மாநகர் பகுதியில் உள்ள டோல்கேட் வழியாக செல்ல வேண்டும்.

7. விருதுநகரில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் கள்ளிக்குடி சந்திப்பில் இருந்து காரியாப்பட்டி, எலியார்பத்தி டோல்கேட், வளையங்குளம் சந்திப்பு, சிந்தாமணி மற்றும் மதுரை மாநகர் பகுதியில் உள்ள டோல்கேட் வழியாக செல்ல வேண்டும்.

8 நெல்லை மற்றும் விருதுநகரில் இருந்து திண்டுக்கல் மற்றும் பழனி செல்லும் வாகனங்கள் கள்ளிக்குடி சந்திப்பில் தே.கல்லுப்பட்டி, பேரையூர் சந்திப்பு, உசிலம்பட்டி சந்திப்பு, உசிலம்பட்டி, வத்தலகுண்டு வழியாக திண்டுக்கல் செல்ல வேண்டும். அல்லது கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, உசிலம்பட்டி சந்திப்பு, உசிலம்பட்டி, வத்தலகுண்டு வழியாக திண்டுக்கல் செல்ல வேண்டும்.

 traffic police

9. மதுரை நகர் பகுதியில் இருந்து திண்டுக்கல், வத்தலகுண்டு, பெரியகுளம், கொடைக்கானல் மற்றும் கோவை செல்லும் வாகனங்கள் மதுரையில் இருந்து பாத்திமா கல்லுரி வழியாக பரவை, சமயநல்லுர், தேனுர், சோழவந்தான், கரப்பட்டி, பள்ளப்பட்டி, நிலக்கோட்டை மற்றும் செம்பட்டி வழியாக செல்ல வேண்டும்.

10.விருதுநகர், நெல்லை, செங்கோட்டையில்  இருந்து திண்டுக்கல் மற்றும் தேனி செல்லும் வாகனங்கள் திருமங்கலம் உசிலம்பட்டி ரோடு சந்திப்பில் இருந்து சிந்துப்பட்டி, தி.விலக்கு, உசிலம்பட்டி வழியாக செல்ல வேண்டும். மேற்கண்ட வழிதடம் வழியாக செல்ல வேண்டும் எனவும், எக்காரணம் கொண்டும் மதுரை மாநகருக்குள் செல்லக்கூடாது எனவும் மதுரை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் தெரிவித்தார்.