ஈரோட்டில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

 
teachers

ஈரோட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு வட்டார கல்வி அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மோகன்ராஜ், வட்டாரத் தலைவர் தேவராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.  இதில் மாவட்ட செயலாளர் மணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

erod

இந்த ஆர்ப்பட்டத்தில், திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என்றும், தேசிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், இடைக்கால ஆசிரியர் ஊதியம், ஜிபிஎஸ் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வளர்மதி, மாவட்ட துணைச் செயலாளர் சிவகுமார் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.