திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரவீன்குமார் அபினவு பொறுப்பேற்பு!

 
tiruppur

திருப்பூர் மாநகரின் 11-வது காவல் ஆணையராக பிரவீன்குமார் அபினவு ஐபிஎஸ் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பணிபுரிந்து வந்த பிரபாகரன் ஐபிஎஸ், சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டார். புதிய காவல் ஆணையராக, சேலம் சரக டிஐஜியாக பணிபுரிந்து வந்த பிரவீன்குமார் அபினவு நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, நேற்று அவர் திருப்பூர் மாநகர காவல் துறையின் 11-வது காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பதவி ஏற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன்குமார் அபினபு, திருப்பூர் மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் வரும் பொருமக்களின்  குறைகளை தீர்க்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

tiruppur

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும் என கூறிய அவர், குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் பிரவீன்குமார் அபினவு தெரிவித்தார்.