ஈரோட்டில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்நிறுத்தம்!

 
power cut

ஈரோட்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சார நினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் தெற்கு ரயில்வே மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், பட்டேல் வீதி, சிதம்பரம் காலனி, 80 அடி ரோடு, காந்திஜி ரோடு, பெரியார் நகர் வீட்டுவசதி வாரியம், எஸ்.கே.சி.ரோடு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மரப்பாலம், வளையக்கார வீதி, பாலசுப்ராயலுவீதி, நேதாஜி ரோடு, கள்ளுக்கடைமேடு, முனிசிபல் சத்திரம், ஜீவானந்தம் ரோடு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. 

இதேபோல், ஈரோடு சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் நசியனூர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் தட்டான்குட்டை, ஓடக்காடு, செல்லப்பம்பாளையம், லட்சுமிபுரம், கே.ஆர்.பி.நகர், சித்தோடு, வசுவபட்டி, நடுப்பாளையம், டெலிபோன் நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

power cut

ஈரோடு சூரியம்பாளையம் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் மாணிக்கம்பாளையம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் அம்பேத்கர் நகர், நரிப்பள்ளம், மரவபாளையம், அம்மன்நகர், ஆசிரியர் காலனி, செந்தமிழ் நகர், சாமி நகர், எல்லப்பாளையம், பெரிய சேமூர், சின்ன சேமூர், வேலன் நகர், எம்.ஜி.ஆர். நகர், சூளை, ஈ.பி.பி.நகர், அருள்வள்ளன் நகர், தென்றல் நகர், கள்ளன்கரடு, சீனாகாடு, பொன்னி நகர், மாமரத்து பாளையம், சொட்டையம் பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.