மின்கட்டண உயர்வை கண்டித்து, கோவை - திருப்பூர் மாவட்டத்தில் நாளை முதல் விசைத்தறிகள் வேலை நிறுத்தம்!

 
power looms

கோவை - திருப்பூர்  மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாளை காலை 6 மணி முதல் விசைத்தறிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக,  கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை - திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று கோவை மாவட்டம் கோம்பக்காடுபுதுரில் உள்ள தனியார் மஹாலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் குமாரசாமி, துணை தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், துணை செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பூபதி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சாதா விசைத்தறிக்கு IIIA2-வுக்கு மிக அபரிதமாக உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற்று, IIIA2-வுக்கு முழு விலக்கு அளித்து சாதா விசைத்தறி தொழிலையும் பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் சார்பு  தெழிலாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை காப்பாற்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மான நிறைவேற்றப்பட்டப்பட்டது.

கோவை - திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாதா விசைத்தறியாளர்கள் ழுழுமையாக  கூலிக்கு நெசவு செய்து வருவதால், விசைத்தறியாளர்களால் அபரிமிதமான மின் கட்டண உயர்வை எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது என்றும், அதனால் சாதா விசைத்தறி டேரிப் IIIA2-வுக்கு உயர்த்தியுள்ள, சிலாப் அடிப்படையில் 0.70, 1.05., 1.40 பைசா ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே முழுமையாக விலக்கு அளிக்க அரசு உடனடியாக கவனத்தில் எடுத்து சாதா விசைத்தறிக்கான டேரிப் IIIA2வுக்கு முழுமையாக விலக்கு அளித்து சாதா விசைத்தறி தொழிலளையும், பல ஆயிரம் விசைத்தறியாளர்கள், லட்ச கணக்கான தொழிலாளர் குடும்ப வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு அரசை கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

power loom

மேலும், செப்.10 முதல் சாதா விசைத்தறிக்கு IIIA2 அபரிமிதமாக உயர்த்திய மின்கட்டண அளவில் கணக்கீடு செய்யப்படும் மின் கட்டணத்தை சாதா விசைத்தறியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக முழுமையாக மின்கட்டணம் செலுத்தாமல் இருந்து நமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. கடந்த காலங்களை போல சாதா விசைத்தறிக்கும், பல ஆயிரம் விசைத்தறியாளர்களுக்கும் , லட்சக்கணக்கான தொழிலாளர்களுககும்  குடும்ப வாழ்வாதாரத்தை காக்க சாதா விசைத்தறிக்கு IIIA2வுக்கு அபரிமிதமாக உயர்த்திய 30 சதவீத மின்கட்டணத்தில் இருந்தும், ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்தும் மின்கட்டணத்தில் இருந்தும் முழுமையாக விலக்கு அளித்து சாதா விசைத்தறிக்கு அரசு பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

சாதா விசைத்தறிக்கு IIIA2-க்கு உயர்த்திய 30 சதவீத மின்கட்டணத்தையும், ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்வையும் முழுமையாக விலக்கு அளித்து அரசு அறிவிக்கும் வரை நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணியில் இருந்து விசைத்தறிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என ஒரு மனதாக தீர்மானிக்கப்படுவதாகவும், இதில் விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு போராட்டங்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.