"கோழிப்பண்ணை துவங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற வேண்டும்" - நாமக்கல் ஆட்சியர்!

 
namakkal

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக கோழிப்பண்ணை தொடங்க விரும்புபவர்கள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- 25,000 மற்றும் அதற்கு மேற்பட்ட கோழிகள் உள்ள கோழிப்பண்ணைகள் தொடங்குதல் மற்றும் செயல்படுத்துவதற்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒப்புதல் பெறப்பட்ட பின்பு போழிப்பண்ணைகள் அமைப்பதற்கான விதி தமிழ்நாட்டில் தற்போது பின்பற்றப்பட்டு வரப்படுகிறது.

poultry

01.01.2023 முதல் 5,000 கோழிகள் மற்றும் அதற்கு மேல் எண்ணிக்கை உள்ள அனைத்து கோழிப்பண்ணைகள் தொடங்க மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

எனவே புதிய சுற்றுச்சூழல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 5,000 கோழிகள் மற்றும் அதற்கு மேல் எண்ணிக்கை உள்ள அனைத்து கோழிப்பண்ணைகளும் இயங்குவதற்கு 01.01.2023 முதல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB)ஒப்புதல் (CTE / CTO) பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதால் கோழிப்பண்ணையாளர்கள் அனைவரும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெற இதன்வழி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என தெரிவிக்கப்பட்டு உள்ளது.