118 அடியை எட்டிய பொள்ளாச்சி ஆழியாறு அணை... கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 
aliyar

பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டியதால் அணையில் இருந்து வினாடிக்கு 4,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட உள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆழியார் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்தது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பாதுகாப்பு கருதி ஆழியாறு அணையில் இருந்து 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 4,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 

aliyar

இதனால் ஆழியார் ஆற்றங்கரையோர பகுதிகளான ஆனைமலை, அம்பராம்பாளையம், ஆற்றுப்பொள்ளாச்சி, கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ மற்றும் கால்நடைகளை ஆற்றில் இறக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.