புதுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காவல்துறை கொடி அணிவகுப்பு!

 
pudukkottai

புதுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே தலைமையில் காவல்துறை கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

புதுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று காவல்துறை கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தலைமையில் நடைபெற்ற இக்கொடி அணி வகுப்பில் , டிஎஸ் ராகவி, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள், அதிரடிப்படை வீரர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

pudukottai

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் துவங்கிய கொடி அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடையே அச்சமின்றி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதேபோல், நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கீரனுர் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளில் டிஎஸ்பிக்கள் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.  போலீசார் அணிவகுத்து செல்வதை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.