தேனி அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை... காதலன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

 
suicide

தேனி அருகே காதலன் குடும்பத்தினர் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி அருகே உள்ள பின்னதேவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் இலங்கைராஜா. இவரது மகள் பாண்டீஸ்வரி(17). இவர் தேனியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், பாண்டீஸ்வரி, அதே பகுதியை சேர்ந்த விக்ரம் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பாண்டீஸ்வரியின் பெறறோர், இது குறித்து விக்ரமின் பெற்றோரிடம் பேசியபோது, அவர்கள் விக்ரம் அவரை காதலிக்கவில்லை என கூறி, அவதூறாக பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த பாண்டீஸ்வரி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

theni

மேலும், அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது தற்கொலை முடிவிற்கு விக்ரம், அவரது தாயார் சுதா உள்ளிட்ட 5 பேர் தான் காரணம் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது தந்தை இலங்கைராஜா, அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பாண்டீஸ்வரியின் காதலன் விக்ரம் உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதல் தோல்வியால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.