பிளஸ் 2 மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை... ராமநாதபுரத்தில் சோகம்!

 
suicide suicide

ராமநாதபுரத்தில் பிளஸ் 2 மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ராமநாதபுரம் சாலை தெருவில் வசித்து வருபவர் ராபர்ட் ஜெயக்குமார். இவர் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பெலிஷியா மேக்டலின்(17). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை பெலிஷியா மேக்டலின் வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் மாலை நீண் ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

ramnad gh

இதனை அடுத்து, ராபர்ட் ஜெயக்குமார், ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெலிஷியா மேக்டலினை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை ராமநாதபுரம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் பெண்ணின் உடல் சிதறிய நிலையில் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில், ரயில்வே போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண், மாயமான மாணவி பெலிஷியா மேக்டலின் என தெரியவந்தது.

தொடர்ந்து, ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி த்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பெலிஷியா மேக்டலின் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.